

மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘சவூதி அரேபிய நாட் டின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 700-க்கும் அதிகமா னோர் உயிரிழந்துள்ளனர். பலர் காய மடைந்துள்ளனர். இறந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவை அனு தாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. இறந்தவர்களுக்கு இரங்கல் தெரி விக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.