Published : 09 Aug 2020 07:14 AM
Last Updated : 09 Aug 2020 07:14 AM

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மீண்டும் திறப்பு: ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் ‘பிளாட்டினம் பிளஸ்’ திட்டம் அறிமுகம்

சென்னை

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 4 மாதத்துக்கு பிறகு, அம்மா முழு உடல் பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கியது. இங்கு ரூ.4 ஆயிரம் கட்டணத்தில் ‘அம்மா பிளாட்டினம் பிளஸ்’ என்ற புதிய பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் வி.ஆனந்த்குமார் கூறியதாவது:

சென்னையில் கரோனா தொற்றுகுறைந்துள்ளதால், அம்மா முழுஉடல் பரிசோதனை மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே உள்ள 3 பரிசோதனை திட்டங்களோடு, தற்போது ரூ.4 ஆயிரத்துக்கு ‘அம்மா பிளாட்டினம் பிளஸ்’ என்ற பரிசோதனை திட்டமும் புதிதாக தொடங்கப்பட்டுள் ளது. இதில் இதய செயல்பாட்டைகண்டறியும் ‘டிரெட்மில்’ பரி சோதனை செய்யப்படுகிறது.

மேலும், கண்பார்வை, கண் அழுத்தம், பார்வை குறைபாடு, விழித்திரை, நுரையீரல் செயல் பாடு பரிசோதனைகளும் செய்யப் படுகின்றன. பரிசோதனை செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 7338835555 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளில் 15 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும்.

இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் செய்துகொள்ள ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். பரிசோதனை முடிவுகளை பார்க்கும் டாக்டர்கள், தேவை இருந்தால் உரிய மேல் சிகிச்சைக்கு அறிவுறுத்துகின்றனர். பரிசோதனைக்கு வரும் பயனாளிகளுக்கு கட்டணமின்றி தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x