தொழிலாளர் சட்டங்களை நீக்குவதை கைவிட வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்டங்களை நீக்குவதை கைவிட வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தொழிலாளர் சட்டங்களை நீக்குவதை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது. தொழிலாளர் சட்டங்களை நீக்குவதை கைவிட வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கையை நிறைவேற்றக் கூடாது. ரத்து செய்யப்பட்ட பி.எஸ்.என்.எல் டெண்டரை கைவிட வேண்டும். பாதுகாப்பு தொழிற்சாலைகள் நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல், காப்பீடு, வங்கி, ரயில்வே உள்ளிட்ட துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. பொதுமுடக்க காலத்துக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்க வேண்டும். பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதை கைவிட வேண்டும். வருங்கால வைப்பு நிதி சந்தாவை 10 சதவீதமாக குறைக்கக் கூடாது. வட்டித் தொகையை குறைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ஜானகி தலைமை வகித்தார். மாவட்ட உதவித் தலைவர் தமிழரசன், சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் மோகன்தாஸ், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐன்டியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் ராஜசேகரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க நகரத் தலைவர் பரமசிவம், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பொன்ராஜ், விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி நகரத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

இதே போல், எட்டயபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், ஏஐடியுசி கட்டுமான சங்க செயலாளர் சேது, மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், பாலமுருகன், முருகேசன், சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் கண்ணன், சிஐடியு தலைவர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in