மனித உரிமைகள் பெயரில் செயல்படும் சங்கங்கள்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

மனித உரிமைகள் பெயரில் செயல்படும் சங்கங்கள்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 
Updated on
1 min read

மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் சங்கங்கள் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக டிஜிபிக்கும், பதிவுத்துறை ஐஜிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சங்கங்கள், அமைப்புகளின் பெயரில் மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதித்து, சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் 2010-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், சர்வதேச மனித உரிமை ஆணையம், மனித உரிமை அமைப்பு என்ற பெயர்களில் சங்கங்கள் பதிவு செய்து, பதிவு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், கட்டப் பஞ்சாயத்து நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பறித்தும், அதிகாரிகளை மிரட்டியும் வரும் இந்த அமைப்புகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபி, மற்றும் பதிவுத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையப் பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in