Published : 24 Sep 2015 08:41 AM
Last Updated : 24 Sep 2015 08:41 AM

3,300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்: அரசின் விதிகளை மின்சார வாரியம் பின்பற்றவில்லை - மின்துறை பொறியாளர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

3,300 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு போடப் பட்டுள்ள ஒப்பந்தத்தில் அரசின் கொள்முதல் விதிகளை மின்சார வாரியம் பின்பற்றவில்லை என தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, இந்த அமைப்பின் தலைவர் சா.காந்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மின்சாரம் உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களிடம் இருந்து 3,300 மெகாவாட் மின்சாரத்தை சந்தை விலையை விட மிக அதிக விலையில் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அரசின் கொள்முதல் விதிகளை கொஞ்சமும் மதிக்காமல் இந்தக் கொள்முதல் ஒப்பந்தத்தை மின்சார வாரியம் செய்துள்ளது. இதன் மூலம், வாரியத்துக்கு ரூ.40,327 கோடி இழப்பு ஏற்படும். இந்தக் கொள்முதலை செய்ய பல தவறான தகவல்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், ஆணை யம் ஒன்றும் தெரியாதது போல் மவுனம் சாதிக்கிறது.

வடசென்னை மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை ரூ.2.87. ஆனால், கொள்முதல் விலையோ ஒரு யூனிட் டுக்கு ரூ.4.91 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. கொடுப்பதோ ஒரு யூனிட் டுக்கு ரூ.5.59 முதல் ரூ.6.38 பைசா.

ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 11 மின் உற்பத்தி நிலையங்களில் 3 நிலையங் கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் மட்டும் ஆண்டொன்றுக்கு ரூ.1,204 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஜிஎம்ஆர் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ரூ.12.50 என்பதால் வாங்க வேண் டாம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டும் மின்சார வாரியம் நீண்டகாலமாக வாங்கி வந்துள்ளது.

தற்போது ஆணையத்தில் நிலுவை யில் உள்ள 3,300 மெகாவாட் (15 ஆண்டு காலம்) மற்றும் 2,100 மெகாவாட் (ஓராண்டு காலம்) கொள்முதல் ஒப் பந்தங்களை மக்களிடம் கருத்துக் கேட்புக்கு முன்வைக்க ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x