அடையாளத்தை மாற்ற அறுவைசிகிச்சை: கோவையில் இறந்த இலங்கை தாதா குறித்து புதிய தகவல்

அடையாளத்தை மாற்ற அறுவைசிகிச்சை: கோவையில் இறந்த இலங்கை தாதா குறித்து புதிய தகவல்
Updated on
1 min read

கோவையில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கட லக்கா, தனது அடையாளத்தை மாற்ற அறுவைசிகிச்சை மேற்கொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதாவான மதுமாசந்தான லசந்தா பெரேரா (எ) அங்கட லக்கா(35) கோவையில் இறந்தது தொடர்பாக, அவரது காதலி அமானி தான்ஜி(27), மதுரை சிவகாமிசுந்தரி(36), ஈரோடு தியானேஸ்வரன்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமானி தான்ஜி நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறும்போது, "கடந்த பிப்ரவரி மாதம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்கட லக்காவுக்கு மூக்கு அறுவைசிகிச்சை நடந்துள்ளது. திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதால் இந்த சிகிச்சை மேற்கொள்வதாக அவர் மருத்துவமனையில் தெரிவித்திருந்தாலும், போலீஸாரிடம் சிக்காமல் இருக்கவே தனது அடையாளத்தை மாற்றிக் கொள்ளத் திட்டமிட்டு, அறுவைசிகிச்சை செய்துகொண்டிருக்கலாம்.

சேரன் மாநகரில் அங்கட லக்கா சென்றுவந்த உடற்பயிற்சிக் கூடத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான அவரது செல்போன் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in