Published : 08 Aug 2020 07:19 AM
Last Updated : 08 Aug 2020 07:19 AM

ஆகஸ்ட் 12-ல் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும்: ஆன்லைன் தரிசனத்துக்கு இஸ்கான் அமைப்பு ஏற்பாடு

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து வர உள்ளன. ஊரடங்கு நீடிப்பதால் வழக்கம்போல் சிலைகள் விற்பனையாகுமா என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், ‘கடவுள் விட்ட வழி’ என்ற எண்ணத்தோடு சிலைக்கு வண்ணம் தீட்டும் வடமாநிலப் பெண். இடம்: சென்னை பேசின்பிரிட்ஜ். படம்: பு.க.பிரவீன்

சென்னை

கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி ஆன்லைன் தரிசனத்துக்கு இஸ்கான் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, இஸ்கான் அமைப்பின் சென்னை கோயில் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸிடம் கேட்டபோது, “அஷ்டமி திதி அன்று கிருஷ்ணரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறோம். இஸ்கான் அமைப்பைப் பொறுத்தவரை சூரிய உதயத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தில் எந்த தினத்தில் அஷ்டமி திதி வருகிறதோ அன்றைய தினமே (ஆக. 12-ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி வருகிறோம். கிருஷ்ணர் பிறந்த மதுரா பிருந்தாவனத்திலும் வரும் 12-ம்தேதிதான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது" என்றார்.

இதற்கிடையே இஸ்கான் அமைப்பின் சென்னை கோயில் தலைவர்சுமித்ரா கிருஷ்ண தாஸ் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கால், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியின்போது இஸ்கான் சென்னை கோயில் மூடப்படும். இருப்பினும், இஸ்கான் சென்னை https://www.youtube.com/c/iskconchennai என்ற யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து அபிஷேகத்தில் பங்கேற்கலாம்.

பல்வேறு போட்டிகள் குறித்த முழுவிவரங்களை http://www.iskconchennai.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஆகஸ்ட் 8 முதல் 12-ம் தேதி வரை இஸ்கான் சென்னை 'மெய்நிகர் பிருந்தாவன் யாத்திரையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் www.studygita.com/yatra மூலம் ஆன்லைனில் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x