Published : 07 Aug 2020 12:39 PM
Last Updated : 07 Aug 2020 12:39 PM

தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

திருநெல்வேலி

தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல்லை சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில்துறையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய முதல்வர், "சோதனையான காலகட்டத்திலும் கூட இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளது.தென் மாவட்டங்களில் அதிகமாக தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது.

அந்த வகையில், தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும். அதுதவிர தென் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர்க்கு நிறைய சலுகைகள் வழங்கப்படும்" என்றார்.

இ பாஸ் வழங்க கூடுதல் குழு அமைப்பு:

இ பாஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகளைக் களையும் விதமாக தமிழகம் முழுவதும் கூடுதலாக ஒரு குழு அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.

இது தொடர்பாக முதல்வர், "கரோனா ஊரடங்கை ஒட்டி சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் விரும்பினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் முழுவிவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு இ பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அவ்வாறு இபாஸ் பெறப்பட்டு வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தம் பொறுப்பில் கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு நோய் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லாவிட்டால் முறையான தனிமைப்படுத்துதலுக்குப் பின் நிறுவனங்கள் அவர்களைப் பணியமர்த்திக் கொள்ளலாம்" என்றார்.

கரோனா தடுப்பில் தீவிரம்..

தமிழகத்தில் கரோனா நோய்ப்பரவலைத் தடுக்க தினமும் 60,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக முதல்வர் பழனிசாமி கூறினார். அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அதிகமாகப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போதைக்கு நாளொன்றுக்கு 5000-க்கு மேல் தொற்று இருக்கிறது. இதைப் படிப்படியாக குறைக்க வேண்டுமென்கிற முனைப்புடனேயே அரசு செயல்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குணமடைந்தோர் சதவீதம் அதிக.

கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு வகுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகளை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x