ஓசூரில் மக்களின் குறைகளை தெரிவிக்க `மை எம்எல்ஏ ஓசூர்' என்ற செயலி தொடக்கம்

ஓசூர் எம்எல்ஏ அலுவலகத்தில் மை எம்எல்ஏ ஓசூர் என்ற புதிய செயலியை தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். உடன் ஓசூர் எம்எல்ஏ சத்யா மற்றும் பலர்.
ஓசூர் எம்எல்ஏ அலுவலகத்தில் மை எம்எல்ஏ ஓசூர் என்ற புதிய செயலியை தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். உடன் ஓசூர் எம்எல்ஏ சத்யா மற்றும் பலர்.
Updated on
1 min read

ஓசூர் சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, அரசு அலுவலர்களுக்கும் இடையே பாலமாக விளங்கும் வகையில் ஓசூரில் “மை எம்எல்ஏ ஓசூர்” டெலிகிராம் குழு என்ற புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, ஓசூர் எம்எல்ஏ அலுவலகத்தில், எம்எல்ஏ சத்யா தலைமையில் நடந்தது. திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு புதிய செயலியை அறிமுகப்படுத்தி பேசியது:

இப்புதிய டெலிகிராம் குழு மூலமாக மக்களின் குறைகளை சட்டப்பேரவை உறுப்பினருக்கு, குறைதீர்க்கும் அலுவலர் மூலமாக கொண்டு சென்று தீர்வுக்கு வழி காண முயற்சி எடுக்கப்படுகிறது. இக்குழுவின் நிர்வாகிகளாக அனைத்து அரசியல் கட்சி பிரதி நிதிகள், குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள். தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து சங்கங்கள், கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர். பலதரப்பில் இருந்தும் நிர்வாகிகள் இணைந்து வழிநடத்துவதால் இந்த குழு நடுநிலையாக செயல்பட்டு மக்கள் குறைகளை மட்டும் முன்னிலைப்படுத்தி தீர்வு கிடைக்க பாடுபடுகிறது. இவ்வாறு அவர்கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்சுகுமார் மற்றும் மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in