Published : 07 Aug 2020 07:09 AM
Last Updated : 07 Aug 2020 07:09 AM

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு

கரோனா பாதிப்புள்ளோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புள்ளோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது நல்ல பலன் தருவதாக அறியப்பட்டுள்ளது. சித்த மருந்தான கபசுரக் குடிநீர் அருந்துவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சென்னை நகரில் தொற்றால்பாதிக்கப்பட்ட பல பேர் விருப்பத்துடன் சித்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுமுழுமையாக குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 16 ஆயிரம் பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே தொற்றைத் தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் சித்தமருத்துவமனைகளை ஏற்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சித்த மருத்துவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரசு சித்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வந்தாலும் தொற்று வேகமாக பரவக்கூடிய காரணியாக உள்ளது.

இந்நிலையில், சித்த மருத்துவ முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, கீரை, காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது என நமது முன்னோர் வகுத்த பாதையில் பயணித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கிருமி தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க என்னென்னதேவை என்பதை ஆட்சியர்களிடம் திட்ட அறிக்கை கொடுத்துள்ளோம். அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியஉதவியாளர்கள், பணியாளர்கள் குறித்த அறிக்கை கொடுத்துள்ளோம். சித்த சிகிச்சை மையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x