

முதல்வர் பழனிசாமி திருநெல்வேலியில் இன்று நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி, இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர், தென்காசி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.