

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 5,820 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. 3,620 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 182 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மூன்று பேர் உயிரிழந் தனர். தற்போது 2,136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,210 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு நேற்று மேலும் ஒருவர் உயிரிழந் தார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித் துள்ளது. நேற்று ஒரே நாளில் 311 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இதுவரை 6,311 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,838 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளத்தூர் காவல் உதவி ஆய்வாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,564 ஆக உயர்ந்து ள்ளது. நேற்று 40 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 1,662 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 866 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப் பட்டது. மொத்தம் 5,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.
தென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அரசு வெளியிடும் அறிக்கையின் படி கடந்த இரண்டு நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் நாளை திருநெல்வேலியில் ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.