Published : 06 Aug 2020 10:04 AM
Last Updated : 06 Aug 2020 10:04 AM

ரூ.1,500-க்கு இ-பாஸ்களை விற்றதாக திருச்சி இளைஞர்கள் 2 பேர் கைது: வாட்ஸ் அப் குழுவில் தகவல் பரப்பியவரும் சிக்கினார்

வேலூர்

தமிழக அரசின் கட்டணம் இல் லாத இ-பாஸ்களை ரூ.1,500-க்கு விற்ற புகாரின்பேரில் திருச்சி யைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமை யாளர்கள் உட்பட 3 பேரை வேலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூரில் வாட்ஸ் அப் குழு ஒன்றில், ரூ.1,500 கொடுத் தால் சென்னைக்கு செல்வதற் கான அரசின் வாகன இ-பாஸ் பெற்றுத் தருவதாக குரல் பதிவு ஒன்று பரவியது. அந்த நபரை சிலர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பணம் செலுத் தினால் 2 மணி நேரத்தில் அரசின் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் நேற்று முன்தினம் உத்தர விட்டார். அதன்பேரில், இ-பாஸ் குறித்து தகவல் வெளியிட்ட வேலூர் பெரிய அல்லாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்குமார்(18) என்பவரை பாகாயம் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், “வடிவேல் என்பவரது அறிமுகம் வாட்ஸ் அப் குழுவின் மூலமாக எனக்கு கிடைத்தது. அவர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற்றுத் தருவதாகக் கூறினார். யாராவது தெரிந்தவர்கள் கேட்டால் பரிந் துரை செய்யுமாறு கூறியிருந்தார். எனவே, இ-பாஸ் தேவைப் படும் நபர்களுக்கு ரூ.1,500 கட்டணம் என்று கூறி வாட்ஸ் அப் குழு ஒன்றில் தகவலை பதிவு செய்தேன். இதுவரை யாருக்கும் இ-பாஸ் பெற்றுத்தரவில்லை” என்று ஜெகதீஸ்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மேற் பார்வையிலான தனிப்படை போலீஸார் திருச்சி கொட்டப் பட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வடிவேல்(27), முத்தர சநல்லூர் சிவஞானம் மகன் ஸ்டாலின்(26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இவர்களில், வடிவேல் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். ஸ்டாலினும் ஏற்கெனவே டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டிராவல்ஸ் தொழில் பாதிக்கப்பட்டதால் பணம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் பெற்றுத் தந்துள்ளனர். வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக தகவல் பரப்பி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல அரசின் இ-பாஸ் பெற்று விற் றுள்ளனர்.

இ-பாஸ் பெறும் நடை முறை கள் அனைத்தையும் தங்களது செல்போன் மூல மாகவே செய்துள்ளனர். கட்டணம் இல் லாமல் உரிய ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் இ-பாஸ்களை இவர்கள் இரு வரும் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்றுள் ளனர்.

சுமார் 100 பேருக்கு இவர் கள் இருவரும் இ-பாஸ் விற்றுள்ளது போலீஸா ரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் கைதான நிலையில், இவர்க ளுக்கு உதவி செய்த குற்றச் சாட்டின் அடிப்படையில் ஜெகதீஸ்குமாரும் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x