Published : 06 Aug 2020 07:49 AM
Last Updated : 06 Aug 2020 07:49 AM

இ-பாஸ் விற்பனை விவகாரம்; மாவட்ட எல்லைகளில் விசாரணை: போலீஸார் தீவிர நடவடிக்கை

இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நியாயமான காரணங்களுக்காக வெளியூர் செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 90 சதவீதம் பேருக்கு நிராகரிக்கப்படுகிறது. ஆனால் பணம் பெற்றுக் கொண்டு சிலர் மிக எளிதாக இ-பாஸ் வாங்கி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்துவெளியே வரும் பயணிகளிடம் தமிழகத்துக்குள் செல்ல ரூ.8,500கொடுத்தால் 15 நிமிடத்தில் இ-பாஸ் பெற்றுத் தருவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். கர்நாடகா, ஆந்திரா போன்றபக்கத்து மாநிலங்களுக்குச் செல்ல ரூ.20 ஆயிரம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரூ.3 ஆயிரத்துக்கு இ-பாஸ் வாங்கித் தருவதாக டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவர்தொலைபேசியில் பேசுவதும், ரூ.500 இ-பாஸ் வாங்கித் தருவதாக மற்றொரு ஏஜென்ட் வாட்ஸ்அப்பில் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து மாவட்டஎல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x