அயோத்தியில் ராமர் கோயில் பிரதமருக்கு ஓபிஎஸ் நன்றி

அயோத்தியில் ராமர் கோயில் பிரதமருக்கு ஓபிஎஸ் நன்றி
Updated on
1 min read

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்குதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மானிட அவதாரம் எடுத்து, அறவாழ்வு நெறிமுறைகளை உலகுக்கு உணர்த்திய திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதரித்த அயோத்தியில், ராமர் கோயில் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையை முன்னின்று நடத்தி அடிக்கல் நாட்டியுள்ளார். இது இந்தியாவில் வாழும்இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் பல கோடி மக்களின் இதயங்களில் அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இளங்கோவடிகளால் துதிக்கப்பட்ட ராமபிரானுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்று கடந்த 1992-ம் ஆண்டு நடந்த தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதாவின் சிந்தனை செயலாகும் வகையில், அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்று வரவேற்கத்தக்க வகையிலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in