

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன்(91) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் தங்கியுள்ளார்.
நேற்று அவருக்கு காய்ச்சல்ஏற்பட்டதால், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரதுஉடல்நிலை சீராக இருப்பதாகவும், கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப் பட்டிருப்பதாகவும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம் தெரிவித்தார்.