

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடந்ததையொட்டி கோவில்பட்டியில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் இன்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
இதையொட்டி கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி, விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள், மற்றும் இந்து முன்னணி அமைப்புகளின் சார்பில் கோவில்பட்டியில் உள்ள 36 வார்டுகளுக்கு 3 பிரிவுளாக சென்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ராமபிரானின் திருவுருவப்படம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் மாரிச்செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் காளிதாசன், பிரச்சார பிரிவு மாவட்ட பொறுப்பாளர் லெட்சுமணக்குமார், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் சுதாகரன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட அமைப்பாளர் நம்பிராஜன், விஷ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் ஆலய பாதுகாப்பு குழு பொறுப்பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.