வழக்கு ஆவணங்களை ஒப்படைப்பதற்காக தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு சைக்கிளில் சென்ற மாற்றுத்திறனாளி

மதுரைக்கு சைக்கிளில் செல்லும் மாற்றுத் திறன் இளைஞர் ராஜா.
மதுரைக்கு சைக்கிளில் செல்லும் மாற்றுத் திறன் இளைஞர் ராஜா.
Updated on
1 min read

தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(40), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தேவி(35). இவர்களுக்கு ராம்குமார், ராஜேஷ் ஆகிய மகன்கள், ரம்யா என்ற மகள் உள்ளனர். ராஜா தனியார் அச்சகம் ஒன்றுக்காக கோயிலுக்கு விபூதி பாக்கெட் ஒட்டிக்கொடுக்கும் பணியை வீட்டில் இருந்து செய்து வருகிறார்.

ராஜாவுக்கு 14 வயது சிறு வனாக இருந்தபோது (1994-ல்) மதுரையில் நடைபெற்ற விபத்தில், இடது கால் துண்டானது. விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு, அப்போது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சரியான ஆவணங்கள் இல்லாத நிலையில், உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. சிறு வயது என்ப தால் மேல் முறையீடு செய்யாமல் விட்டுவிட்டார். அதன் பிறகு இவ் வழக்கு 2004-ல் தஞ்சாவூர் நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கருணை அடிப்படை யில், 1.17 லட்சம் ரூபாயை நீதி மன்றம் வழங்கியது. இந்நிலையில், தற்போது ராஜாவின் நண்பர் ஒருவர், சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் வழக்கறிஞர் ஒருவரை மதுரை நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதைய டுத்து, விபத்து தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு, கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு செல்ல இருந்தார்.

ஆனால் ஊரடங்கால் செல்ல முடியவில்லை. ஊரடங்கு தொடர்ந் துகொண்டே இருப்பதால், நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தஞ்சாவூரில் சைக்கி ளில் மதுரைக்குப் புறப்பட் டார். மாலை 5 மணிக்கு மதுரை யைச் சென்றடைந்த இவர், வழக் கறிஞரை சந்தித்து ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து நேற்று காலை சைக்கிளில் புறப் பட்டு, நேற்று இரவு தஞ்சாவூரை வந்தடைந்தார்.

தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு ஒற்றைக்காலுடன் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்றுதிரும்பிய ராஜாவின் தன்னம்பிக்கையை பலரும் பராட்டினார்.

இதுகுறித்து ராஜா கூறியபோது, “தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு 10 மணி நேரத்தில் சென்றுள்ளேன். இடையில் சாப்பிட 2 இடத்தில் சைக்கிளை நிறுத்தினேன். 8 மணி நேரத்தில் சென்று விட முடியும் என நினைத்து பயணத்தை தொடங்கினேன். ஆனால் லேசான மழை, எதிர்க்காற்று வீசியது உள்ளிட்ட பல காரணங்களால் 2 மணி நேரம் தாமதமானது. விபத்து ஏற்பட்டு ஒரு காலை இழந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளை தொலைத்திருக்கிறேன். இருந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து குடும்பத்தை நடத்தி வந்தேன். கொரோனாவால், பொருளாதார ரீதியாக பல துயரங்களை சந்தித்துவிட்டேன். இந்நிலையில் என் மனுவை ஏற்று உரிய இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in