காவல் ஆணைய பரிந்துரைகளை திமுக ஆட்சியில் அமல்படுத்தவில்லை: முதல்வர் குற்றச்சாட்டு

காவல் ஆணைய பரிந்துரைகளை திமுக ஆட்சியில் அமல்படுத்தவில்லை: முதல்வர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மற்றும் சிறைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் கூறியதாவது:

எம்ஜிஆர் ஆட்சியில் ‘தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம்’, 1991-ல் ‘தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியம்’, 1992-ல் அனைத்து மகளிர் காவல் நிலையம், 1993-ல் ‘சிறப்பு இலக்குப் படை’, 1994-ல் ‘கடலோரப் பாதுகாப்பு குழு மம்’, இந்த ஆட்சியில் ‘தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை’, ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டம், காவல் சிறப்பு அங்காடிகள் என பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன.

திமுக ஆட்சியில் 3 காவல் ஆணையங்கள் உருவாக்கப்பட்ட தாக உறுப்பினர் கூறுகிறார். ஆனால், இந்த ஆணையங்களின் பரிந்துரைகள் எதுவும் திமுக ஆட்சி யில் அமல்படுத்தப்படவில்லை.

காவல் நிலையங்களுக்கு அரசியல்வாதிகள் செல்வதைத் தவிர்க்க நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் ஏதாவது கோரிக் கைகள் அளிக்க வேண்டும் என்றால் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகளை சந்தித்து வழங்க வேண்டும் என்றும் காவல் ஆணையம் பரிந்துரை செய்தது.

ஆனால், அரசியல்வாதிகள் காவல்நிலையங்களுக்கு செல் வதை தவிர்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும் அதனை நடை முறைப்படுத்த இயலாது என்றும் திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in