

‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 111-வது பிறந்த நாள் மற்றும் இலக்கியப் பரிசளிப்பு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
தமிழர்களின் அடையா ளமாக வாழ்ந்தவர் சி.பாஆதித் தனார். தமிழுக்காகவும் தமிழ் இன வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். எழுத்தாளர்கள் வாழும் காலத் திலேயே பாராட்டி கவுரவிக்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் அவ்வாறு கவுரவிக்கப்படுவது குறைவு. இந்த ஆதங்கம், அனைத்து படைப்பாளிகளுக்கும் இருக்கிறது. ஒரு கவிஞனின் மரணத்தில்தான் அவனது படைப்பு உயிர் பெறுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கு சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழ் அறிஞர் விருது மற்றும் ரூ.3 லட்சம் பரிசும், இயக்குநர் தங்கர் பச்சான் எழுதிய ‘தங்கர் பச்சான் சிறுதைகள்’ நூலுக்கு சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு மற்றும் ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.
‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், கவிப்பேரரசு வைரமுத்து, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மூத்த வழக் கறிஞர் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.