தமிழகத்தில் உள்ள 214 இஎஸ்ஐ கிளினிக்குகள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தகவல்

தமிழகத்தில் உள்ள 214 இஎஸ்ஐ கிளினிக்குகள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள 214 இஎஸ்ஐ கிளினிக்குகள், 6 படுக்கை கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பண்டாரு தத்தாத்ரேயா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவக் கல்லூரி டீன் ஸ்ரீகுமாரி தாமோதரம், மருத்துவக் கண்காணிப்பாளர் உமா குல்ஷேத்ரா, மண்டல இயக்குநர் மணி, மாநில மருத்துவ ஆணையர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் தத்தாத்ரேயா கூறியதாவது:

இந்த மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அதனால், இந்தக் கல்லூரி மூடப்படாது. கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 214 இஎஸ்ஐ கிளினிக்குகள், 6 படுக்கைகள் கொண்ட மருத் துவமனைகளாக தரம் உயர்த் தப்படும். நாடு முழுவதும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்காக மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப் பப்படுகின்றனர். இதுபோன்ற வசதி யில்லாத இஎஸ்ஐ மருத்துவ மனை களில் விரைவில் ரத்த சுத்திகரிப்பு கருவி, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் அமைக் கப்படும்.

இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு தொடங்கப்படும். இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் மருத் துவமனைகளில் சிகிச்சை பெறு வதற்கு வசதியாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி, வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

26, 27-ல் கலந்தாய்வு

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடப்பு கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ), அனுமதி வழங்கியது. இங்கு மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் மாநில அரசுக்கு 80 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டின்படி தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 80 இடங்கள், வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் 3-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in