

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாக இருந்து மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 86-வது ஜெயந்தி விழா இன்று (ஆக.5) கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா அன்று அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடப்பது, அயோத்தி விவகாரத்தில் சுவாமிக ளின் ஈடுபாடு, ஆர்வம், உழைப்பு ஆகியவற்றுக்கு சான்றாக அமைந் துள்ளதாக சங்கர மடத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெயந்தி விழாவை ஒட்டி மடத்தின் எல்லா கிளைகளிலும் ஸ்ரீ ராம ஷடாக்ஷரி ஜப ஹோமம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வேத பாராயணம், ஏகா தச ருத்ர ஜப ஹோமம், ராம ஷடாக் ஷரி ஜப ஹோமம் நடைபெறுவ தோடு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் விசேஷ பூஜை, ஆராதனை அபி ஷேகம் ஆகியவை நடைபெறும்.
மாலையில் ஏழை எளியோ ருக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட உள்ளன. தேனம்பாக்கத் தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் வேத பாராய ணம், ஹோமங்கள், விசேஷ அபி ஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக கோயில்களில் ஸ்தல புராணங்கள், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்து புல வர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகி யவை புத்தகமாக வெளியிடப்பட உள்ளன.
இதில், இந்து சமய அறநிலை யத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி காணொலி மூலம் பங்கேற்கி றார். காமாட்சி அம்மன் கோயிலி லும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன என்று சங்கர மடம் சார் பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அச்சம் இருப்ப தால் பக்தர்கள் இந்த நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்க இயலாது.