பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கான கால அளவை நீட்டித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித்துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்புக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 20 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16,940 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்டு 04 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாணாக்கர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை ஆகஸ்டு 20 வரை மேற்கொள்ளலாம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்டு 10 முதல் ஆகஸ்டு 20 வரை மேற்கொள்ளலாம்”.

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in