திருடிய நகைகளை விற்று தோழிக்கு நகை வாங்கிய கொள்ளையன் கைது

திருடிய நகைகளை விற்று தோழிக்கு நகை வாங்கிய கொள்ளையன் கைது
Updated on
1 min read

திருடிய நகைகளை விற்று தோழிக்கு நகை வாங்கிக் கொடுத்தகொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு, பீட்டர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சையத் அபித் ரஸா. இவரது வீட்டில் கடந்த மாதம் 27-ம் தேதி புகுந்த கொள்ளையன், பீரோவிலிருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டான்.

இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.முதல் கட்டமாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில், திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், பழனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மேகநாதன் (32) என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட மேகநாதன் மீது அண்ணா சதுக்கம், தண்டையார்பேட்டை காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.

தற்போது, மேகநாதனின் மனைவி ஊரடங்கையொட்டி சொந்த ஊர் சென்றுவிட்டார்.

இதையடுத்து மேகநாதன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். தான்திருடிய நகைகளை தியாகராயநகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் விற்று அந்த பணத்தில் தனது தோழிக்கு கம்மல், ஜிமிக்கியை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மேகநாதன் திருடிய நகையையும், தோழிக்கு பரிசளிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in