

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள், தற்போது தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்கள் வழியாக நடந்த சுமார் 400 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
இதில், கடத்தல்காரர்களுக்கு உதவிய சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி, கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த சிலரிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. தங்கக் கடத்தலில் உள்ள தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.