Published : 04 Aug 2020 07:22 AM
Last Updated : 04 Aug 2020 07:22 AM

இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

இ-பாஸ் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருவிக மண்டலத்தில் இதுவரை 8 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டு அதில் 6 ஆயிரத்து 603 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். முதல்வர் பழனிசாமி வரும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் கரோனா பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் சரியான காரணங்களின் பேரில் இ-பாஸ் வழங்கப்படுகிறது. தற்போது கரோனாதொற்றின் வீரியம் கட்டுக்குள்உள்ள நிலையில், மாவட்டத்துக்குள் இ-பாஸ் தேவையில்லை. வேறு மாவட்டத்துக்கு செல்லும்போது இ-பாஸ் கட்டாயம் வாங்கவேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x