Published : 04 Aug 2020 07:21 am

Updated : 04 Aug 2020 07:21 am

 

Published : 04 Aug 2020 07:21 AM
Last Updated : 04 Aug 2020 07:21 AM

சென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

e-pass-for-workers

சென்னை

சென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக தொடர்புடைய நிறுவனங்கள் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்று இலவச கரோனா தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இதை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர்.


பின்னர் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும். தொழிலாளர் துறை மூலமாக பணிக்கு திரும்பும் தொழிலாளர்களை கையாளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக தொடர்புடைய நிறுவனம் முதலில் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கு குறைந்தபட்ச அடிப்படைவசதிகள் இருந்தால் போதுமானது. இதுபோன்று நிறைய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறோம்.

தொழிலாளர்களை தனிமைப்படுத்தப்படுவது, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் குழுஆய்வு செய்யும். சென்னையில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது முழு வீச்சில் கரோனா தடுப்பு பணிகளை தொடர வேண்டியிருக்கும். இப்போது உள்ள சூழலில் சென்னையில் ஊரடங்கு நீக்கம் என்பது சிரமமான ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.


இ-பாஸ்சென்னை திரும்பும் தொழிலாளர்மாநகராட்சி ஆணையர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author