Published : 04 Aug 2020 07:15 am

Updated : 04 Aug 2020 07:15 am

 

Published : 04 Aug 2020 07:15 AM
Last Updated : 04 Aug 2020 07:15 AM

டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்து சாதனை

delta-districts

சென்னை

நடப்பு ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாதஅளவு 3 லட்சத்து 87 ஆயிரம்ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றுவேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளபாசன வயல்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவும், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு 25 தினங்களுக்கு முன்பாகவும் பாசன நீர்சென்றடைந்தது. இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட்3-ம் தேதி நிலவரப்படி 3 லட்சத்து87 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகடந்த ஆண்டைவிட 1.067 லட்சம்ஏக்கர் அதிகமாகும். மேலும், கடந்த30 ஆண்டு வரலாற்றில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுவே ஆகும்.

அதுபோல பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கரில்பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டதைவிட, 1.03 லட்சம் ஏக்கர் அதிகமாகும்.

அரசு நடவடிக்கைகள் கார ணமாக குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கரில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுவை நெல் சாகுபடிவேளாண்மைத் துறைமேட்டூர் அணைகாவிரி டெல்டாDelta districts

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author