Published : 04 Aug 2020 07:06 AM
Last Updated : 04 Aug 2020 07:06 AM

வருமானவரி கணக்கை எளிதாக தாக்கல் செய்ய புது திட்டம்

வருமானவரி செலுத்துவோர் பிழையின்றியும், எளிதாகவும் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்காக புதிய முன்னோடி திட்டத்தை சோதனை அடிப்படையில் வருமானவரித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழகம், புதுச்சேரிக்கான முதன்மை தலைமைவருமானவரித் துறை ஆணையர்எம்.எல்.கார்மாகர், வருமானவரி முதன்மை ஆணையர் ஜஹான்ஷேப் அக்தர் ஆகியோர் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவோர் பிழையின்றியும், எளிதாகவும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்காக புது முன்னோடி திட்டம் சோதனை முறையில் சென்னை,மும்பை, டெல்லி, கொல்கத்தாமண்டலங்களில் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. இதன் மூலம், வருமானவரித் தாக்கல் செய்யும்போது தேவைப்படும் அனைத்து தகவல்களும், அதை தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு அவ்வப்போது பிழைகள் சரி செய்யப்படும்.

நாடு முழுவதும் வாரம்தோறும் 5 ஆயிரம் வருமானவரி கணக்குகள் இந்த நடைமுறை மூலம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8,569 வருமானவரி கணக்குகளில் இதுவரை 1,900 கணக்குகள் இப்புதிய நடைமுறை மூலம் பரிசீலிக்கப்பட்டு உள்ளன. நாட்டின் எந்தஒரு பகுதியிலும் உள்ள வருமானவரி செலுத்துபவரின் கணக்கை, பிற எந்த பகுதியிலும் உள்ள அலுவலகமும் பரிசீலிக்க இயலும். இதன்மூலம், யாருடைய கணக்குயாரால் எங்கு பரிசீலிக்கப்படுகிறதுஎன்ற விவரம் தொடர்புடையவருக்கு தெரியாமல் இருக்கும்.

இதன் காரணமாக, வருமானவரி கணக்குகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் பரிசீலிக்கப்படும். மேலும், ஒருவருடைய வருமானவரி கணக்கை ஒரேநபர் பரிசீலனை செய்யாமல் 4 பேர்கொண்ட குழு பரிசீலித்து மறுமதிப்பீடு செய்து இறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x