பிற்படுத்தப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்தில் கடன்

பிற்படுத்தப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்தில் கடன்

Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் பெறலாம் என ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம் பாட்டு கழகம் மூலம் பொரு ளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக்கடன் மற்றும் 50 சதவீதம் அரசு மானியம் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இதில் பயன்பெற விரும்பு வோர் சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, கணினி வழி பட்டா, அடங்கல் நகல் ஆகியவற் றுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in