Published : 03 Aug 2020 06:56 AM
Last Updated : 03 Aug 2020 06:56 AM

கோயம்பேடு சந்தை சிறு மொத்த வியாபாரிகளுக்கு முகப்பேரில் கடைகள் ஒதுக்க சிஎம்டிஏ திட்டம்

கோயம்பேடு சந்தையை சேர்ந்த சிறு மொத்த வியாபாரிகளுக்கு தற்காலிகமாக முகப்பேரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் கடைகளை ஒதுக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் 1,985 காய்கறி கடைகள் இயங்கி வந்தன. இவற்றில் 600 சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள பெரிய மொத்த வியாபார கடைகளில் 200 கடைகள் தேர்வு செய்யப்பட்டு, அவை திருமழிசை தற்காலிக சந்தையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 300, 150 சதுர அடி பரப்பு கொண்ட சிறு மொத்த வியாபாரிகளுக்கும், சென்னையில் பிற பகுதிகளில் கடைகளை ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் முகப்பேர் பகுதியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல் தேர்வு செய்யப்பட்டு அங்கு விரைவில் 200 கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

கோயம்பேடு சந்தையில் சிறு மொத்த வியாபாரிகள் சுமார் 1,700 பேர் உள்ளனர். இவர்களில் 200 பேருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட உள்ளன.

இந்நிலையில் கடைக்காரர்களை நேர்மையாக தேர்வு செய்யும் விதமாக, குலுக்கல் முறையில் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயனிடம், கோயம்பேடு மலர், காய், கனி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x