கரோனா வார்டுகளாக 813 ரயில் பெட்டிகள்: ரயில்வே தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள பழைய ரயில் பெட்டிகளில் 813 பெட்டிகள் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலஅரசுகளும் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இருப்பினும், சில இடங்களில்ஏற்பட்டுள்ள இடப் பற்றாக்குறையை போக்க, ரயில்வேயால் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரயில்வே மூலம் 5,231 பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளைப் பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன. அதன்படி, இதுவரை புதுடெல்லி - 503, உத்தரபிரதேசம் - 270, பிஹார் - 40 எனமொத்தம் 813 பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்தால், கூடுதல் பெட்டிகளை வழங்கவும் ரயில்வே தயாராகஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in