Published : 03 Aug 2020 06:38 AM
Last Updated : 03 Aug 2020 06:38 AM

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர்.படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம் தமிழக அரசு சார்பில் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் ஆகியோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி னர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினமான ஆகஸ்ட் 2-ம் தேதியன்று, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டி திருவிகதொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சின்னமலையின் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தி மக்கள் தொடர்புத் துறைஇயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தீரன் சின்னமலை சிலைக்குமாலை அணிவித்தும், படத்துக்குமலர்தூவியும் மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நாட்டுப்பற்றுக்கும், வீரத்துக்கும் இன்றைக்கும் தமிழக இளைஞர்களுக்கு அடையாளமாக விளங்கும் தீரன் சின்னமலை நாட்டுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது சென்னைகிண்டியில் சிலை அமைக்கப்பட்டது. நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதும் திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான். கொங்குமண்டல இளைஞர்கள் கல்வி,வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் கருணாநிதிதான்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அவரது வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும்வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கை தகர்க்கவீரமுடன் போராடிய மன்னர் தீரன்சின்னமலையின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x