Published : 02 Aug 2020 12:40 PM
Last Updated : 02 Aug 2020 12:40 PM

நோய் பாதிப்பில் இருந்து குணமடைவது அதிகரிப்பு: இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை மக்கள்

மதுரையில் கரோனா பாதிப்பில் இருந்து அதிகமானோர் குண மடைந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 11,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அள வில் இது 4-வது இடம். மாநகரில் மட்டும் 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 247 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியிலேயே 80 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வரை 8,631 பேர் குணமடைந்துள்ளனர். நோயில் இருந்து அதிகமானோர் குணமடை யும் பட்டியலில், மதுரை மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது.

கரோனாவிலிருந்து குணமடை வோர் எண்ணிக்கை மதுரையில் அதிகமாக இருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியுள் ளனர். கரோனா ஊரடங்கால் மூடப் பட்டிருந்த தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வரத் தடை உள்ள தால், மதுரை மாவட்டத்தில் வர்த்தகம் மட்டுமின்றி கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x