Published : 02 Aug 2020 11:33 AM
Last Updated : 02 Aug 2020 11:33 AM

உடுமலை வீதியில் மக்கள் நெரிசல்: கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை

உடுமலையில் அரசு அலுவல கங்கள் நிறைந்த சாலையில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் கரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை, நீதிமன்றங்கள், சார்-பதிவாளர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, சார் நிலை கருவூலம், உணவகங்கள், தேநீர் அங்காடிகள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் அலுவலகங்கள், முத்திரை தாள் விற்பனையாளர்கள், நகலகங்கள் இயங்கிவருகின்றன. பல்வேறு அலுவல்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் இச்சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.

அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் இச்சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இதற்கிடையே, இச்சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் நெரிசல் அதிகரித்துவருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள் ளது. காவல் துறையினர் கண் காணித்து, மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x