

திருவாரூர் மாவட்டம, மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தலையாமங்கலம் ஊராட்சி பகுதியில், கடந்த 2017- 19 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் கழிப்பறை திட்டம் திட்டத்தில் வீடுகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படாமல் ரூ 2.50 கோடி மோசடி நடந்துள்ளது
இதுதொடர்பாக தலையாமங்கலம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அளித்த புகார் மூலம் வெளியான இந்த முறைகேடு குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் பொன்னியின் செல்வன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய மேலாளர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, சண்முக சுந்தரம் ஓவர்சியர் பிரபாகரன் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில அதிகாரிகள் விரைவில் இந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும்.
இதுதொடர்பாக விரைவில் காவல்துறை விசாரணை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.