Published : 02 Aug 2020 07:46 AM
Last Updated : 02 Aug 2020 07:46 AM

இணையதள பதிவேற்றத்தை எளிதாக்கிய பதிவுத் துறை: சொத்து விற்பனை பத்திரத்தை பொதுமக்களே தயாரிக்கும் வசதி  

சென்னை

இணையதளம் வாயிலாக பொதுமக்களே சொத்து விற்பனை பத்திரங்களை தயாரிக்கும் வசதியை பதிவுத் துறை எளிமையாக்கியுள்ளது.

பதிவுத் துறையில் அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டு, தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலம் இணையதள வழி பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களே ஆன்லைன் வழி பதிவுக்கான பத்திரங்களை உருவாக்கும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இதற்காக பதிவுத் துறையின் tnreginet.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் உள்நுழைவை (login) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் பயனாளர் பெயர் (user name), கடவுச்சொல்லை (password) பதிவு செய்து உள் நுழைய வேண்டும். தொடர்ந்து, பதிவு செய்தல்- ஆவணப்பதிவு, ஆவணத்தை உருவாக்குக என்பதை பதிவு செய்ய வேண்டும்.. அதன்பின் எந்த வகை பத்திரம் என்பதை தேர்வு செய்து, சொத்தை விற்பவர் மற்றும் தாய்ப் பத்திர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

எழுதிக்கொடுப்பவர் பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பொது அதிகாரம் ஏதேனும் இருந்தால் முகவர்பெயர் விவரங்கள் பதிவு செய்யவேண்டும்.குறைந்தபட்சம் இரு சாட்சிகள் விவரங்கள் வேண்டும். சொத்தின் சர்வே எண், பரப்பு உள்ளிட்டவற்றையும் பதிவு செய்யவேண்டும்.

திருத்தும் வசதி உண்டு

அதன்பின் கட்டணத்தை செலுத்தி, தயாரிக்கப்பட்ட பத்திரத்தை வெள்ளைத்தாள் அல்லது முத்திரைத்தாளில் பிரதி எடுத்து, முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாள், நேரத்தில் பதிவு செய்யலாம். பிழைகள் இருந்தால், பதிவுக்கு முன் உரிய வகையில் திருத்திக் கொள்ளும் வசதியும் இதில் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x