Published : 02 Aug 2020 07:25 AM
Last Updated : 02 Aug 2020 07:25 AM

தமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடியகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 10 செமீ, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செமீ, தேவாலா, கரூர் மாவட்டம் பாலவிடுதி ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x