Published : 02 Aug 2020 07:21 AM
Last Updated : 02 Aug 2020 07:21 AM

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை: விவசாயிகள் பின்பற்ற வேளாண் துறை வேண்டுகோள்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று விவசாயிகளை தமிழக வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி கூறும்போது,

‘‘குறுகிய காலத்தில் வேகமாகப் பரவும் திறன் கொண்ட அமெரிக்கன் படைப்புழுவை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது மிகவும்முக்கியம். ஒட்டுமொத்த பரப்பில்அனைத்து விவசாயிகளின் வயல்களிலும், ஒரே நேரத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். அதனால், போர்க்கால அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக ரூ.47 கோடியே 66 லட்சத்தை அரசு ஒதுக்கியது. அதன்படி, 1 லட்சத்து 19 ஆயிரத்து486 ஹெக்டேரில் அரசே பயிர் பாதுகாப்பு மருந்துகளை ஒட்டுமொத்தமாக தெளித்ததால் கடந்த ஆண்டுமக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்குதல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு (2020-2021) காரிப்பருவ மக்காச்சோள சாகுபடிதொடங்கியுள்ளது. இதையொட்டி விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடைஉழவு செய்தல், கடைசி உழவில் ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல், தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள், சோளம்மற்றும் சாமந்தி பயிர்களை வரப்புப் பயிராகவும், உளுந்து, பாசிப்பயிறை ஊடு பயிராகவும் பயிரிட்டுநன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் என்பன உள்ளிட்ட ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x