Published : 10 Sep 2015 08:59 AM
Last Updated : 10 Sep 2015 08:59 AM

சினிமா பாணியில் காரை மடக்கி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச் செட்டி சத்திரம் அருகே திரைப்பட பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குடியாத்தம் சந்தவேல் பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் அசோக்குமார் ஜெயின். இவர், தனது புதிய நகைக் கடைக்காக, நகைகளை வாங்கி வர கடை ஊழியர்கள் பிச்சாண்டி, மெய்வண்ணன் ஆகியோரிடம், ரூ.1.80 கோடியை தந்து காரில் சென்னைக்கு அனுப்பினார். காரை பாஸ்கர் என்பவர் ஓட்டி சென்றார்.

பாதுகாப்புக்காக காரை ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் அசோக்குமார் கண்காணித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச் செட்டி சத்திரம் அருகே புண்ணியம் பட்டறை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப் போது, இனோவா மற்றும் ஷிப்ட் ஆகிய 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் பணத்துடன் வந்த காரை மடக்கினர்.

பின்னர், முகமூடி அணிந்த மர்மநபர்கள், நகைக்கடை ஊழி யர்களை கத்தியை காட்டி மிரட்டி யதாகக் கூறப்படுகிறது. இதில் அச்சமடைந்த 3 பேரும், தப்பி ஓடினர். இதையடுத்து மர்ம நபர்கள், பணம் கொண்டு வரப்பட்ட காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அப்போது, பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தை கார் கடந்து சென்றதும், காரை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணித் துக் கொண்டிருந்த உரிமையா ளர், காரின் கதவுகளை முடக்கியுள் ளார். இதனால், பதற்றமடைந்த மர்மநபர்கள் காரை நிறுத்தி அதிலிருந்த ரூ.60 லட்சம் கொண்ட ஒரு பையை மட்டும் எடுத்துக் கொண்டு கதவை உடைத்து வெளியேறி, பின்னால் வந்த தங்களது காரில் தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்த பாலுச்செட்டி சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் சரக டிஐஜி (பொறுப்பு) தமிழ்சந்திரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி, வேலூர் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மர்ம கும்பலிடம் இருந்து தப்பிய நகைக்கடை ஊழியர்கள் மற்றும் ஓட்டுநரிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக, அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, காரின் ஓட்டுநர் பாஸ்கர் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் எங்களது காருக்கு மிக அருகே திடீரென 2 கார்கள் வந்தன. அதிலிருந்த மர்ம நபர்கள், எங்கள் காரின் முன்பக்க கண்ணாடியின் மீது பெரிய கல்லை வீசினர். இதில், கண்ணாடி உடைந்து எங்கள் மீது சிதறியது. நாங்கள் சுதாரித்து கொண்டு, காரை நிறுத்தி பின்னால் எடுத்தபோது மற்றொரு கார் பின்னால் மடக்கியது.

பின்னர், காரில் இருந்து முகமூடி அணிந்தவாறு 10-க் கும் மேற்பட்டோர், கையில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் எங்களை தாக்க வந்தனர். இதனால், காரில் இருந்து இறங்கி தப்பியோடினேன். மற்றவர்களும் இதேபோல் தப்பினர். சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் எங்களது காரையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x