Published : 01 Aug 2020 03:16 PM
Last Updated : 01 Aug 2020 03:16 PM

நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைபெற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவி: எம்.பி சு.வெங்கடேசன் வழங்கினார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனையில் உள்ள கரோனா (கோவிட்-19) வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று வழங்கினார்.

மதுரையில் கரோனா வேகமாக பரவும்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இந்த தொற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு அரசு நிதிகள் மூலம் மேம்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த மருத்துவமனைக்கு எம்பி சு.வெங்கடேசன், தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவமனை வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

தற்போது மீண்டும் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.ஆர்.ரவீந்திரன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.சி.தர்மராஜிடம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் விஜயராஜன் மற்றும் சி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

நவீன தொழில்நுட்ப கருவியான இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே, மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுத்த எக்ஸ்ரே படங்களை டிஜிட்டல் எக்ஸ்ரே படமாக மாற்றக்கூடியது.

இதன்மூலம் கரோனா சிகிச்சை பிரிவு நோயாளிகள் அந்தந்த பிரிவுகளில் வைத்தே டிஜிட்டல் எக்ஸ்ரே படம் எடுக்க முடியும். இதன்மூலம் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைபெற பேருதவியாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x