

கரோனா தொற்றால் கோவையின் மூத்த நரம்பியல் மருத்துவர் எம்.பி.பிரனேஷ் உயிரிழந்தார்.
கோவை டாடாபாத் பகுதியில் வசித்து வந்தவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் எம்.பி.பிரனேஷ் (83). கோவை அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை பேராசிரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், பிரபல தனியார் மருத்துவமனைகளில் நரம்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், மூச்சுத்திணறல் பிரச்சினைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.1) அதிகாலை மருத்துவர் பிரனேஷ் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை நரம்பியல் நிபுணர்கள் சங்கம் ஆகியவை இரங்கல் தெரிவித்துள்ளன.