Published : 01 Aug 2020 01:01 PM
Last Updated : 01 Aug 2020 01:01 PM

ஊரடங்கால் டாக்சி/ வேன் ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள் 20 லட்சம் பேர் பாதிப்பு; அரசு உதவ வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை

கரோனா ஊரடங்கால் புகைப்படக் கலைஞர்கள், டாக்சி, வேன் ஓட்டுநர்கள் 20 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் ஆகஸ்டு 31 வரை 4 மாதங்கள் முடிந்து 5-வது மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வாடி நிற்கும் நிலை உள்ளது. மூடிக்கிடக்கும் தொழில் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்துக்குத் தடை, இ-பாஸ் சிக்கல், வேலையின்மை எனக் கடுமையான பாதிப்பைப் பலரும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ புகைப்படக் கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு, அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களைக் காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்”.


இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x