

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் (NDRF) இணைந்து‘பறக்கலாம் வாங்க’ (லெட்ஸ் ஃபிளை) எனும் விமானவியல் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 5-ம் தேதி (புதன்) தொடங்கி5 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது. இதில் விமானவியல் துறை தொடர்பான படிப்புகள்,கற்பதற்கான வழிமுறைகள், வேலைவாய்ப்பு என பல்வேறு தகவல்கள் குறித்து மூத்த அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர்.
முதல் நாள் (ஆக.5) - பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை, ‘இந்திய ஏவுகணைகள்’ குறித்தும், 2-ம் நாள் - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், ‘போக்குவரத்து விமானத்துறை’ குறித்தும்,
3-ம் நாள் - ராணுவ விஞ்ஞானியும், NDRF இயக்குநருமான டாக்டர் வி.டில்லிபாபு, ‘போர்விமானம், ஹெலிகாப்டர்’ குறித்தும், 4-ம் நாள் - பேராசிரியர்செந்தில்குமார், ‘ஆளில்லா விமானங்கள்’ குறித்தும், 5-ம் நாள்- சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநரும், NDRF தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ‘விண்வெளி’ குறித்தும் உரை நிகழ்த்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தொடங்கி, அனைவரும் பங்கேற்கலாம். தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். இதில் பங்கேற்க ரூ.235செலுத்தி, https://connect.hindutamil.in/fly.php இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இந்நிகழ்வில் பங்கேற்க பதிவுசெய்யும் அனைவருக்கும், போர்விமானங்கள் குறித்து டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்ப்பறவைகள்’ என்ற நூலும், ஹெலிகாப்டர் குறித்த ‘எந்திரத் தும்பிகள்’ என்ற நூலும் சிறப்பு சலுகை விலையில் வழங்கப்படும். நூல் தேவைக்கு thizaiyettu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். ‘இந்து தமிழ் திசை’ - தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் இணைந்து நடத்துகின்றன.