Published : 31 Jul 2020 04:37 PM
Last Updated : 31 Jul 2020 04:37 PM

குளித்தலை நகராட்சியில் ரூ.59.73 லட்சம் மோசடி; நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட்

பிரதிநிதித்துவப் படம்

கரூர்

குளித்தலை நகராட்சியில் ரூ.59.73 லட்சம் மோசடி தொடர்பாக நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் கணக்கு தணிக்கை மற்றும் உள்ளாட்சி நிர்வாக உதவி இயக்குநர் தலைமையில் கணக்கு தணிக்கை அண்மையில் நடைபெற்றது. அப்போது, கடந்த 2016-ம் ஆண்டு செப். 1-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நகராட்சி ஊழியர்களின் பொதுசேமநல நிதி, தன் பங்கேற்பு ஓய்வூதிய நிதி, சேமநல நிதி மற்றும் நகராட்சி நிர்வாக நிதிகளை சிபி, பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்ரமணி, எஸ்.சுப்ரமணி என்ற இல்லாத நபர்கள் பெயரில் திறந்த காசோலைகளாக வழங்கி, நகராட்சி அக்கவுண்டண்ட் சத்யா (52), ரூ.59 லட்சத்து 73 ஆயிரத்து 435 மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக சேலம் நகராட்சிகள் நிர்வாக மண்டல ஆணையர் அசோக்குமார், குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் கடந்த வாரம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக கரூர் மாவட்ட காவல் குற்றப்பிரிவில் குளித்தலை நகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ஆர்.மோகன்குமார் அளித்த புகாரின்பேரில் சத்யா மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கடந்த 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் நகராட்சிகள் நிர்வாக மண்டல ஆணையர் அசோக்குமார், குளித்தலை நகராட்சி ஆணையர் ஆ.மோகன்குமார், நகராட்சி பொறியாளரும், முன்னாள் பொறுப்பு ஆணையருமான புகழேந்தி, நகராட்சி முன்னாள் ஆணையர் கார்த்திகேயன், அக்கவுண்டண்ட் சத்யா, இளநிலை உதவியாளர் யசோதாதேவி, கிளர்க் சரவணன் ஆகிய 6 பேரை நேற்று (ஜூலை 30) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x