Published : 31 Jul 2020 04:19 PM
Last Updated : 31 Jul 2020 04:19 PM

கரோனா நிவாரண நிதியை வாரி வழங்கும் யாசகர்: 7-வது முறையாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்

மதுரை

மதுரையில் யாசகர் ஒருவர், 7-வது முறையாக ‘கரோனா’ நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் டிஜி.வினயிடம் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த இந்த யாசகர் பூல்பாண்டிக்கு 65 வயதாகிறது. கடந்த 40 ஆண்டிற்கு மேலாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று யாசகம் செய்வதை முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்.

இவர் இப்படி பொதுமக்களிடம் யாகசம் பெறுவதை தனக்காகச் செலவிடாமல் அதை சேமித்து வைத்து, அரசுப் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பது, இயற்கை சீற்றம் ஏற்படும்போது பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் செலவிடுகிறார்.

அந்த அடிப்படையிலே இவர், கரோனா நிவாரணத்திற்காக இன்று 7-வது முறையாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.

இதுவரை இவர் மதுரை ஆட்சியரிடம் மட்டும் ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்கி எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.

வசதிப்படைத்தவர்களே இந்த ஊரடங்கில் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு கை நீட்டாமல் வீட்டிலே முடங்கி கிடக்கும்நிலையில் இவர் இந்த வயதான காலத்தில் ஊர் ஊராக சுற்றி யாகசம் செய்து, கிடைக்கிற பணத்தை சேமித்து கரோனா நிவாரணத்திற்கு வழங்குவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x