படங்கள் 10: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015

படங்கள் 10: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015
Updated on
2 min read

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்துப் பேசுகிறார். அருகில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தொழில் முதலீட்டாளர்கள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.

மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் முதலீட்டாளர்கள்.

மாநாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களை வரவேற்கும் வகையில், சென்னையின் முக்கிய சாலைகளில் 16 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு தமிழ கத்தின் பல்வேறு கலைகளை விளக்கும் வகையில் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலக முதலீட்டாளர்கள் சந்திப்பையொட்டி, சென்னை சாலையில் முதல்வர் ஜெயலலிதாவை சாகசத்துடன் வாழ்த்தும் அதிமுக தொண்டர். படம்: க.ஸ்ரீபரத்

மாநாட்டில் கலந்துகொள்ள வருவோரின் உடமைகளை பரிசோதித்த பின்னரே அரங்குக்குள் அனுமதித்தனர். படம்: க.ஸ்ரீபரத்

மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அரங்குகள்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் முதலீட்டாளர்களை வரவேற்கும் வகையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தின் வளாகத்தில் இசை, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டிஜிட்டல் மற்றும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில், பறக்கும் குதிரை ஒன்று மாநாட்டு அரங்கில் பறந்து சென்று, மேடையில் முதல்வர் ஜெயலலிதா முன் வந்து வணங்குவது போன்று திரையிடப்பட்ட காட்சி அனைவரையும் கவர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in