சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் தர்ணா

காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி விடுதியொன்றில் தங்கியுள்ள தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி விடுதியொன்றில் தங்கியுள்ள தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணி செய்யும் பெண்கள், காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த விடுதியில் 600-க்கும் அதிகமானோர் தங்கியுள்ளனர். ஒரே அறையில் அதிகம் பேர்தங்குவதால் கரோனா தொற்றுபரவ வாய்ப்பு உள்ளது. எனவே தங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பெண்களில் சிலர் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி மணிமேகலை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நிர்வாகத்துடன் பேசி வீட்டுக்குச் செல்ல விரும்பும் பெண் தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்ல விரும்பும் பெண்களின் பட்டியல் தயாராகியுள்ளது. அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in