

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தனிநபர் தொழில் கடன் திட்டத்தின்கீழ், வியாபாரம் மற்றும் தொழில் தொடங்க அல்லது ஏற்கெனவே செய்துவரும் தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் பெறலாம்.
இந்த கடன் திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டும். இதில், பயன்பெற விரும்புவோர் தேவையான ஆவணங்களுடன் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சஙக இணைப் பதிவாளர் அலுவலகம், அனைத்து நகர கூட்டுறவு வங்கிக் கிளைகள், அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து பயனடையலாம்.