Published : 31 Jul 2020 06:21 AM
Last Updated : 31 Jul 2020 06:21 AM

7 சிறப்பு ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு

தமிழகத்தில் பொது போக்குவரத்து தடை தொடர்வதால், 7 சிறப்பு ரயில்களின் ரத்து மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், பொது போக்குவரத்துக்கும் தடை தொடர்வதால், பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, திருச்சி - செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி - செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை - விழுப்புரம், கோயம்புத்தூர் - காட்பாடி, அரக்கோணம் - கோயம்புத்தூர், திருச்சி - நாகர்கோவில், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஆகிய தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x